திருச்சி மாவட்டம், துறையூர் பாரதி நகரில் வசிப்பவர் கோபாலகிருஷ்ணன் இவர் வங்கியில் மேலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். சம்பவத்தன்று இவர் மற்றும் இவரது மனைவி கவிதா மற்றும் கோபாலகிருஷ்ணனின் சகோதரி ஜோதிமணி ஆகியோர் இரவு உணவு அருந்தி கொண்டிருந்தனர் அப்போது பின்பக்க வழியாக 3 மர்ம நபர்கள் பட்டாக்கத்தியுடன் வந்து ஜோதிமணி மற்றும் கோபாலகிருஷ்ணன் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி உள்ளனர் மேலும் கவிதா அணிந்திருந்த 11 சவரன் நகையை
பறித்துக்கொண்டு சென்று விட்டனர். இது குறித்து துறையூர் காவல் நிலையத்தில் கோபாலகிருஷ்ணன் புகார் அளித்துள்ளார்.
புகாரை பெற்றுக்கொண்ட காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர் பட்டாகத்தியை காட்டி நகை பறித்து சென்ற சம்பவம் துறையூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.