கோவை, பொள்ளாச்சியில் 36 வார்டுகளில் ரூபாய் 170 கோடி செலவில் பாதாள சாக்கடை பணி நடைபெற்று வருகிறது. இதில் ஒரு பகுதியாக 19 வது வார்டு பிரதான சாலை ராஜா மில் ரோட்டில் பாதாள சாக்கடை குழியில் கடந்த மூன்று நாட்களாக மனிதக்கழிவு குடிநீர் இணைப்பில் கலந்து வெளியேறியும் ,சாலையில் செல்லும் பொதுமக்கள் முகம் சுளிக்கும் அளவில் கழிவுநீர் வெளியேறி துர்நாற்றம் ஏற்பட்டு வருகிறது,நகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை தொடர்பு கொண்டு எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை, குப்பை வரி, வீட்டு வரி, சொட்டு வரி என 2024ம் ஆண்டுக்கான வரியை பொதுமக்களிடம் நகராட்சி நிர்வாகம் வசூல் செய்து வருகிறது எனவும் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டதாக தெரிவித்தனர்,மேற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் மைக்கேல் சகாயம் துர்நாற்றம் அதிக அளவில் வீசியதால் முக கவசம் வழங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது,பொள்ளாச்சி ஏ. டி.எஸ். பி.பிருந்தா,நகராட்சி அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்து பாதாள சாக்கடை கழிவு நீர் வெளியேற்றம் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.