திருச்சி மாவட்டம் முசிறியில் வாகனத்திற்கு
உரிய ஆவணங்கள் இன்றி பள்ளி குழந்தைகளை ஏற்றிச் சென்ற தனியார் பள்ளி வாகனத்தை மோட்டார் வாகன ஆய்வாளர் திடீர் சோதனை செய்து வாகனத்தை
பறிமுதல் செய்து முசிறி காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.
முசிறி வட்டார போக்குவரத்து மோட்டார் வாகன ஆய்வாளர் குண்டுமணி முசிறி கைகாட்டியில் திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டார்.
அப்போது அவ்வழியாக வந்த ஒரு தனியார் பள்ளி வாகனத்தை சோதனை செய்த போது அந்த வாகனத்தில் உரிய ஆவணங்கள் இன்றி பள்ளி குழந்தைகளை ஏற்றி வந்தது கண்டறியபட்டது.
இதையடுக்கு வாகனத்தை பறிமுதல் செய்து மேல் நடவடிக்கைகாக முசிறி காவல் நிலையத்தில் தனியார் பள்ளி வாகனத்தை ஒப்படைத்தார். பின்னர் ஓட்டுநர் உரிமம் மற்றும் இன்சூரன்ஸ் இல்லாமல் சென்ற 4 இருசக்கர வாகனங்களை பிடித்து அபராதம் விதித்து எச்சரிக்கை செய்து அனுப்பினார்.