இன்று 16.06.2023 வெள்ளிக்கிழமை, தன்னார்வ சேவை சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில், திருச்சி மாவட்ட ஆட்சியர் . M. பிரதீப் குமார், மாவட்ட ஆட்சியராக பணி ஏற்று ஒரு வருடம் நிறைவு செய்தமைக்காகவும், இன்னும் மென்மேலும், திருச்சி மாவட்ட மக்களுக்கு சேவைகள் பல புரிந்திட வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
மேலும் திங்கள் கிழமைத் தோறும் மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் மனு வழங்கும் நாட்களில் பொது மக்கள் தண்ணீர், மின்விசிறி, கழிப்பறை, போன்ற வசதிகள் பொது மக்களுக்கு
ஏற்பாடு செய்து தருமாறு கோரிக்கை மனு வாங்கப்பட்டது
இந்நிகழ்வில், திருச்சி மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு, பொன்னாடை, கதர் ஆடை, புத்தகங்கள், துணிப்பை மற்றும் நினைவு பரிசு வழங்கப்பட்டது.
கூட்டமைப்பின் சார்பில் தலைவர் பால்குணா லோகநாத், துணைத் தலைவர்கள் கே.சி. நீலமேகம், கோவிந்தராஜ், செயலாளர்கள் காமகோடி சுந்தர், ஆர்.கே. ராஜா, அய்யாரப்பன், நிர்வாகிகள் பாத்திமா கண்ணன், வழக்கறிஞர் இளங்கோ, சர்புதீன், ரஞ்சித், நிர்மலா, சாந்தி மதியழகன், சிவா, கன்மலை எடிசன், லயன் ஸ்ரீதர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் ராஜசேகர் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.