நாகையில் முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டி கடந்த மாதம் நடைபெற்றது. 250 பள்ளிகளை சேர்ந்த மாணவ மாணவிகள் பங்கேற்ற போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ மாணவிகளை மாநில போட்டிகளுக்கு அனுப்பி வைக்க உள்ளனர். அதன்படி மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களை பிடித்த முதலமைச்சர் கோப்பைக்கான பரிசுகளை மாணவர்கள் தட்டி சென்றனர். தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி , தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கௌதமன், உள்ளிட்டோர் பங்கேற்று பரிசுகளை வழங்கினார்கள். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறுகையில் ; அமைச்சர் செந்தில்
பாலாஜிக்கு இருதய அறுவை சிகிச்சை செய்ய இருப்பதால் இலாகா இல்லாத அமைச்சராக அவரே தொடர்வார். எத்தனை முறை ஆளுநர் புறக்கணிப்பு செய்தாலும் முதல்வரின் யார் அமைச்சர் என்று முடிவெடுக்கும் அதிகாரம் முதல்வருக்கு மட்டுமே உண்டு. நியாயமாகத்தான் சோதனை நடைபெறுகிறது என்று பாஜக தலைவர் அண்ணாமலை கூறுவது அநியாயம். சொந்த கட்சியை சேர்ந்த அமைச்சர் வீட்டில் சோதனை நடந்தால் முதல்வரின் ஆதரவு இருக்காதா? கடந்த ஆட்சியில் அதிமுக அமைச்சர்கள் வீட்டில் சோதனைகள் நடந்தபோது எடப்பாடி உள்ளிட்டோர் பதறவில்லையா ? என்று கேள்வி எழுப்பினார்.