கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் மாலை வீதி ரவுண்டானா பகுதியில் குடிமை பொருள் வழங்கல் மற்றும் குற்ற புலனாய்வுத் துறையினர் மற்றும் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.அப் போது நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் இருந்து வந்த டாட்டா ஏசி வாகனத்தை சோதனை செய்தபோது அதில் 28 மூட்டைகளில் 1400 கிலோ ரேஷன் அரிசி வைத்திருப்பது தெரிய வந்ததை
அடுத்து சக்திவேல் (49) , பிரதீப் ( 27) , விஜய் (31) ஆகிய மூன்று நபர்களும் தப்பி ஓட முயன்றுள்ளனர் அவர்களை சுற்றி வளைத்து குடிமை பொருள் வழங்கல் மற்றும் குற்ற புலனாய்வுத்துறை அதிகாரிகள் பிடித்து அவர்களை கைது செய்து 15 நாள் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.