1000 புதிய பஸ்களை வாங்க ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வௌியிட்டுள்ளது. புதிதாக 200 SETC பஸ்கள் வாங்கப்பட உள்ளன. விழுப்புரம் கோட்டத்தில் 190, கோவை கோட்டத்தில் 163, கும்பகோணம் கோட்டத்தில் 155 பஸ்கள் புதிதாக வாங்கப்பட உள்ளன. மேலும் மதுரை கோட்டத்தில் 163, திருநெல்வேலி கோட்டத்தில் 129 பஸ்களும் புதிதாக வாங்கப்பட உள்ளன. 500 பழைய பஸ்களை பழுது பார்க்கவும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.