கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி பேரூராட்சிக்குட்பட்ட வடக்கு தெருவில் சின்ன மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் அருகாமையில் அபிராமி என்பவர் வசித்து வருகிறார். இவர் கோவிலின் இடத்தை ஆக்கிரமிப்பு செய்து சுவர் எழுப்பி பல வருடங்களாக வசித்து வருகிறார். இதனை அதே பகுதியைச் சேர்ந்த மனோகரன் என்பவர் கோவில் இடம் ஆக்கிரமப்பு செய்யப்பட்டுள்ளது குறித்து வருவாய்த்துறையினருக்கு புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் பேரூராட்சி செயல் அலுவலர் செல்வராஜ் தலைமையில் ஆக்கிரமிப்புகளை இடிக்கும் பணி
நடைபெற்றது. ஆக்கிரமிப்பின் போது அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க அரவக்குறிச்சி பொறுப்பு காவல் ஆய்வாளர் வினோதினி தலைமையில் காவல்துறையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். பல வருடங்களாக கோவில் இடம் ஆக்கிரம்பில் இருந்ததை இடித்து அகற்றியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.