சென்னையில் நேற்று அமலாக்கத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டில் காலை முதல் சோதனை மேற்கொண்டனர். பாதுகாப்பு பணியில் மத்திய பாதுகாப்பு படையினர் ஈடுபட்டிருந்தனர். 20மணி நேரத்திற்கும் மேலாக சோதனை நடைபெற்று வந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதன் காரணமாக அமலாக்கத்துறையினர் தங்கள் வந்த வாகனத்திலேயை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்க அவரது உடல்நிலையை மருத்துவர்கள் பரிசோதித்தனர். அப்போது செந்தில் பாலாஜிக்கு இசிஜி அளவு அதிகமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் செந்தில் பாலாஜி துன்புறுத்தப்பட்டிருப்பதாகவும், சுய நினைவுயின்றி இருப்பதாகவும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். இந்தநிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்வதாக அமலாக்கத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் சட்ட ஆலோசனை நடத்தியுள்ளார். மேலும் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அமைச்சர் பதவியில் இருந்து அவரை நீக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. எனவே செந்தில் பாலாஜி வகித்து வந்த மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆய்தீர்வு துறை மற்றொரு அமைச்சருக்கு ஒதுக்கப்படவுள்ளது. புதிய அமைச்சர் நியமிக்கப்படாமல் அமைச்சர் பொறுப்பு மட்டும் மூத்த அமைச்சர்களுக்கு வழக்க இருப்பதாக கூறப்படுகிறது. அந்த வகையில் முதலமைச்சரே இந்த துறைகளை கவனிப்பார் என தெரிகிறது. அல்லது மூத்த அமைச்சராக கேஎன் நேரு, ஏ.வ.வேலு, ஐ.பெரியசாமி பெயர்களும் பட்டியலில் உள்ளதாக தகவல் வௌியானது. இதனை தொடர்ந்து திமுக எம்பி கனிமொழி டிவிட்டரில் கூறியதாவது… அமைச்சரவையில் யார் அமைச்சராக இருக்க வேண்டும், இருக்கக் கூடாது என்பதை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர் மட்டுமே முடிவு செய்ய முடியும். ஆளுநராக இருக்கும் ரவி அவர்களுக்கு அதை முடிவு செய்யும் எந்த அதிகாரமுமில்லை. அரசமைப்பு சட்டத்தை ஆளுநர் மதிக்கவேண்டும் என தெரிவித்துள்ளார். சட்டத்தை மதிக்காத கவர்னரை கண்டித்து எம்பி கனிமொழி விமர்சனம் செய்துள்ளார்.