மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் சார்பில் முதியோர்களுக்கெதிரான கொடுஞ்செயல் எதிர்ப்பு தின உறுதிமொழி மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.பி.மகாபாரதி தலைமையில் இன்று மயிலாடுதுறை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள், மாணவிகள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இவ்வுறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவரின் நேர்முக உதவியாளர் நரேந்திரன் மாவட்ட சமூக நலன் அலுவலர் சுகிர்தா தேவி செய்தி மக்கள் தொடர்பு அலுவவலர் ரவிச்சந்திரன் ஆகியோர் உடன் உள்ளனர்.