பிரபல நகைச்சுவை நடிகர் பாவா லட்சுமணன் மாயி படத்தில் வாமா மின்னல் என்ற காட்சியின் முகம் மூலம் மிகவும் பிரபலம் அடைந்தார் . வடிவேலுவுடன் இணைந்து பல திரைப்படங்களில் காமெடி காட்சிகளில் நடித்து வந்த இவர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டார். சர்க்கரை நோயின் தாக்கத்தின் காரணமாக சென்னை ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவரின் கால் கட்டைவிரல் அறுவை சிகிச்சை மூலம்
அகற்றப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாகவே வருமானமின்றி மருத்துவ செலவுகளுக்கு கூட பணம் இல்லாமல் தவித்து வந்த இவர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். அண்மைக்காலமாக பட வாய்ப்புகள் இல்லாமல் வருமானம் என்று இவர் தவித்து வந்ததாக கூறப்படுகிறது.