அமலாக்கத்துறை சோதனையை தொடர்ந்து மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று நள்ளிரவு 2.15 மணியளவில் கைது செய்யப்பட்டார். அப்போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதன் காரணமாக, சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர பெற்று வருகிறார். இந்த நிலையில் அமைச்சர்
செந்தில்பாலாஜி பூரண குணமடைய வேண்டி வழக்கறிஞர் கோபால் என்பவர் தலைமையில் திமுகவினர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கரூர் பிரம்ம தீர்த்தம் சாலையில் உள்ள வராஹி அம்மன் ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். இதையொட்டி வராஹி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது.