61 நாள் மீன்பிடித் தடைகாலம் இன்றுடன் முடிவடைவதால், நாகை மாவட்ட மீனவர்கள் இன்று நள்ளிரவு முதல் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். முன்னதாக நாகை துறைமுகத்தில் இருந்து அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம், செருதூர், நாகூர் பகுதிகளைச் சேர்ந்த 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் 500, க்கும் மேற்பட்ட விசைப்படகுகளுக்கு தேவையான டீசல் ஜஸ் உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்களை படகில் ஏற்றினர். பின்னர் படகுகளுக்கு பூஜை செய்த மீனவர்கள், கடலில் மீன்கள் அதிகம் கிடைக்க வேண்டி, கடல் மாதாவை
வேண்டிக்கொண்டு உற்சாகத்துடன் கடலுக்குள் மீன்பிடிக்க சென்றனர்.
61 நாட்களுக்குப் பின்னர் மீன் பிடிக்க செல்லும் மீனவர்களுக்கு கடலில் அதிக அளவிலான மீன்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் செல்வதாக தெரிவித்துள்ள நாகை மீனவர்கள், டீசல், ஐஸ் விலை ஏற்றம் அதிகரித்துள்ளதால், பிடித்து வரும் மீன்களுக்கு உரிய விலை கிடைக்க வேண்டுமென்றும் அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.