தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று (23.12.2022) தலைமைச் செயலகத்தில், திரு.மு.ராஜேந்திரன் (ஓய்வு) அவர்கள் தான் எழுதிய “காலா பாணி. நாடு கடத்தப்பட்ட முதல் அரசனின் கதை” எனும் வரலாற்று புதினம் 2022-ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகாதமி விருதிற்கு தேர்வு செய்யப்பட்டதற்காக சந்தித்து வாழ்த்துப் பெற்றார். உடன் அவரது குடும்பத்தினர் மற்றும் அகநி பதிப்பகத்தின் மு. முருகேஷ், வெண்ணிலா ஆகியோர் உடனிருந்தனர்.
தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் இன்று (23.12.2022) சென்னை, தலைமைச் செயலகத்தில், மலேசியா நாட்டின் பினாங் மாநில துணை முதலமைச்சர் பேராசிரியர் ராமசாமியை சந்தித்துப் பேசினார். உடன் நாடாளுமன்ற உறுப்பினர்
வைகோ, தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, பொதுத்துறை செயலாளர் முனைவர் டி. ஜகந்நாதன், பினாங் மாநில சட்டமன்ற உறுப்பினர் சதீஷ் முனியாண்டி, சென்னையிலுள்ள மலேசிய நாட்டின் துணைத் தூதர் கே.சரவண குமார், ஆஸ்பன் குழும நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் அணிலரசு அமரநேசன், எஸ்.ஜி. குழும நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் தத்தோ ஸ்ரீ கணேஷ் பழனியப்பன், தமிழர் முன்னேற்றத்திற்கான பினாங்கு சங்கத்தின் (Penang Society for Advancement of Tamils) தலைவர் தத்தோ டேனியல் சௌந்தர்ராஜன் அப்துல்லா, பினாங் – செபராங் பிராய் சிட்டி கவுன்சிலின் (Seberang Perai City Council) கவுன்சிலர் டேவிட் மார்ஷல் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் ஆகியோர் உள்ளனர்.