திருச்சி மாவட்டம், துறையூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆதனூர் ஊராட்சி பகுதியில் உள்ள காட்டு கருப்பன் கொட்டம் பகுதியில் சுமார் 30 குடும்பங்கள் வசிக்கின்றன இப்பகுதியில் உள்ள கழிவுநீர் வாய்க்காலில் தேங்கியுள்ள கழிவு நீரால் துர்நாற்றம் வீசி வருவதோடு நோய் தொற்று அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர் மேலும் கழிவு நீர் வாய்க்கால் மத்தியில் குடிநீர் இணைப்பு குழாய் பொருத்தப்பட்டுள்ளதாகவும் குடிநீரோடு கழிவு நீர் கலந்து வருவதாகவும் பொதுமக்கள் கூறி வருகின்றனர் மேலும் நீண்ட நாட்களாக தேங்கியுள்ள கழிவுநீரை துப்புரவு பணியாளர்கள் அப்புறப்படுத்தாமல் இருப்பதால் நோய் தொற்று அபாயம் ஏற்படுவதாகவும் பொதுமக்கள் கூறி வருகின்றனர், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை கூறியும் இதுவரை எந்தவிதமான நடவடிக்கை எடுக்கவில்லை என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்..