திருச்சி மாவட்டம், லால்குடி அருகே தாளக்குடி வேம்படியான் தெரு வடக்கு தெருவை சேர்ந்தவர் குமார். இவருடைய மனைவி 42 வயதான அன்பு செல்வி மற்றும் மகன் 23 வயதான அஜித்குமார்.
அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் மற்றும் மனோஜ் இவருக்கும் இடையே இடப்பிரச்சினை சம்பந்தமாக கடந்த 11 ம் தேதி இரவு தெற்குத் தெரு அருகே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை பார்த்துக் கொண்டிருந்த குமாரின் அஜீத்குமார் தகராறில் ஈடுபட்டவர்களை தடுத்துள்ளார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த கனகராஜ் என்பவர் எங்களை தடுக்க நீ யார் என கையால் அடித்துள்ளார். பின்னர் அங்கு நின்று கொண்டிருந்த விக்னேஷ் தான் இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தி எடுத்து அஜித்குமாரின் வலது தோள்பட்டை கீழே குத்தியுள்ளார். மேலும் மணிகண்டன் மற்றும் சதீஷ் ஆகியோர் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அஜித் குமாரை குத்தியுள்ளனர் இதை தடுக்க வந்த அவரது அம்மாவையும் கீழே தள்ளி விட்டதாக கூறப்படுகிறது கத்திக்குத்து பட்ட அஜித்குமார் வலி தாங்க முடியாமல் சத்தம் போடவே அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வந்தனர் இதை பார்த்த நால்வரும் அங்கிருந்து தப்பிச்சென்றனர். இதில் பலத்த காயமடைந்த அஜீத்குமாரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இச்சம்பவம் குறித்து அஜீத்குமாரின் தாய் அன்புச்செல்வி கொள்ளிடம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் கொள்ளிடம் போலீசார், மணிகண்டன், கனகராஜ்,விக்னேஷ், சதீஷ் ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.