சென்னை பசுமை வழிச் சாலையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் அரசு இல்லத்தில் அமலாக்கத் துறையினர் இன்று காலை 8.30 மணி முதல் சோதனை மேற்கொண்டனர். மத்திய தொழிலக பாதுகாப்பு படை வீரர்கள் துணையுடன் 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது மதியம் 3.30 மணியளவில் அமைச்சர் செந்தில்பாலாஜி வீட்டிற்கு திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, எழும்பூர் எம்.எல்.ஏ. பரந்தாமன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் வருகை தந்தனர். அமைச்சர் செந்தில்பாலாஜியை பார்க்க அவர்கள் அனுமதி கேட்டனர். முதலில் சரி என்ற அதிகாரிகள் சுமார் 1 மணி நேரம் கழித்தும் அவர்கள் ஆர்எஸ்பாரதியை அனுமதிக்கவில்லை. இதனை தொடர்ந்து அமைச்ச் செந்தில்பாலாஜியின் வீட்டு வாசலில் சேர் அமர்ந்து உட்கார்ந்து இருந்த திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி நிருபர்களிடம் கூறியதாவது.. அப்போது அவர் கூறியதாவது…. அமைச்சர் செந்தில்பாலாஜியை சந்திக்க அமலாக்கத்துறையினர் அனுமதிக்கவில்லை. அதிமுக -பாஜக இடைேய மோதலை திசை திருப்பும் வகையில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. திட்டமிட்டு அமைச்சர் செந்தில்பாலாஜி வீட்டில் சோதனை செய்கின்றனர். திமுக ஆட்சியில் ஊழல் என்பது போன்ற தோற்றத்தை உருவாக்க சோதனை நடத்துகின்றனர். அமைச்சர் செந்தில்பாலாஜியை தங்கள் முன்னர் காட்ட வேண்டுமென கோரிக்கை வைத்தோம். அனுமதி மறுத்த அதிகாரிகள் ஒரு மணி நேரமாக எந்த பதிலையும் தரவில்லை. திமுக ஆட்சி மீது களங்கம் சுமத்தும் வகையில் சோதனை நடக்கிறது. சோதனையை கண்டு நாங்கள் அஞ்சவில்லை. அவரும் அஞ்ச மாட்டார்.. இவ்வாறு ஆர் எஸ் பாரதி தெரிவித்தார்.