கரூர் மாவட்டம் பள்ளப்பட்டி அருகே நங்கஞ்சி ஆற்றில் பாலமுருகன், உதயகுமார் ,பரத், ராஜேஷ் கண்ணன் ஆகிய நான்கு இளைஞர்கள் ஆற்றில் மீன் பிடிக்க சென்றுள்ளனர். அப்போது ஆற்றில் அதிக அளவு நீர் சென்றுள்ளதால் மாயவன் (18) என்ற இளைஞர் எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கியுள்ளார் அப்பொழுது அருகில் இருந்த நண்பர்கள் தேடிப் பார்த்து கிடைக்காத நிலையில் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர் உடனே வந்த தீயணைப்புத்துறையினர் 2 மணி நேரம் போராட்டத்துக்குப் பிறகு மாயவனை சடலமாக மீட்டனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக அரவக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து அரவக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.