கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன் மலையில் உள்ள வெள்ளி மலை அருகே எழுத்தூர் கிராமத்தில் வசிக்கும் கோவிந்தன் குடும்பத்திற்கும் அதே ஊரைச் சேர்ந்த ராஜசேகர் என்பவர் குடும்பத்திற்கும் நீண்ட காலமாக நிலத்தகராறு பிரச்சனை இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று கோவிந்தன் குடும்பத்தினர் அவரது நிலத்திற்கு சென்றுள்ளனர் அப்போது ராஜசேகர் மற்றும் அவரது மகன்களான பாலகிருஷ்ணன் பாபு ஆகியோர் கோவிந்தன் குடும்பத்தினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அடுத்து வாக்குவாதம் முற்றவே ராஜசேகர் மற்றும் அவரது இரண்டு மகன்களும் கோவிந்தன் குடும்பத்தினரை கையில் வைத்திருந்த அருவாள் மற்றும் கத்தியுடன் அதாவது சங்கர் உண்ணாமலை சுசீலா கலியமூர்த்தி ஆகிய நான்கு பேருக்கும் சரமாரியாக அறிவாளால் வெட்டி தாக்கியுள்ளனர். நிலத்தகராறு காரணமாக ராஜசேகர் குடும்பத்தினர் கோவிந்தன் குடும்பத்தினர் அரிவாள் வெட்டிய தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்துள்ள நிலையில் அந்த வீடியோ வந்து தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த சம்பவம் குறித்து கரியாலூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்