கடலூர் மாவட்டம், கடலூரில் திருப்பாப்புலியூரிலிருந்து குறிஞ்சிப்பாடிக்கு கார் ஒன்று சென்றது. திருப்பாப்புலியூர் இருந்து புறப்படும் பொழுது காரின் மேலே தேசியப் பறவையான மயில் ஒன்று அமர்ந்தது. இதை அறியாமல் கார் டிரைவர் காரை எடுத்துக்கொண்டு குறிஞ்சிப்பாடி நோக்கி புறப்பட்டு சென்றது. சாலையில் நின்று கொண்டு இருந்த பொதுமக்கள் அதனை வேடிக்கையாக பார்த்து வியந்து போனார்கள். வாகனம் கடலூர் திருப்பாப்புலியூர் வரும்பொழுது சாலைகள் கொண்டிருந்தவர்கள் வாகனத்தை பார்த்து கூச்சலடவே அவ்விடத்தில் வாகனத்தை நிறுத்தி உள்ளார் . மேலும் சாலையில் நின்று கொண்டிருந்த போக்குவரத்து காவலர்கள் வாகனத்தில் இருந்த தேசிய பறவை மயிலை பார்த்து விசாரணை செய்தனர். பின்பு வாகனத்தின் மேலே இருந்த மயிலை பிடித்து கடலூர் தன்னார்வலரும் பாம்பு பிடி வீரருமான செல்லாவிடம் ஒப்படைக்கப்பட்டு பின்பு காப்பு காட்டில் விடப்பட்டது. கடலூரில் காரின் மீது மயில் பயணம் செய்த சம்பவம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.