காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூரில் கொட்டும் மழையில் சாலையில் விழுந்த பேனரை நனைந்தபடி அகற்றிய பெண் காவலரின் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகிவருகிறது.
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக மாலை நேரங்களில் கன மழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்த நிலையில் நேற்று குன்றத்தூர், மாங்காடு, பூந்தமல்லி பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வந்த நிலையில் குன்றத்தூர் பஸ் நிலையத்தை சுற்றிலும் ஏராளமாக கட்சி நிர்வாகிகள் பேனர்களை வைத்துள்ளனர். இந்நிலையில் பலத்த காற்றின் காரணமாக சாலையின் ஓரத்தில் வைக்கப்பட்டிருந்த பேனர் ஒன்று அறுந்து பறந்து வந்து சாலையிலன் நடுவே விழுந்தது. இதனை கண்ட அங்கு பணியில் இருந்த பெண் போலீசார் ஒருவர் வாகன ஓட்டிகள் பாதுகாப்பு நலன் கருதி கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் கொட்டும் மழையில் நனைந்தபடி சாலையில் விழுந்து கிடந்த பேனரை தனியாக அப்புறப்படுத்தினார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. மேலும் சமூக ஆர்வலர்கள் பாராட்டி வருகின்றனர்.