பெரம்பலூர் மாவட்ட காவல் கணகாணிப்பாளர் ச.ஷ்யாம்ளா தேவி தலைமையில் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்கள் மற்றும் காவல் அலுவலகங்கள் அனைத்திலும் இன்று 12.06.2023 -ம் தேதி காவல்துறையினர் மற்றும் அமைச்சுப்பணியாளர்கள் அனைவரும் குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி ஏற்றனர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரம்பலூர் மாவட்டத்தில் குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது எனவும் தமிழகத்தை குழந்தை தொழிலாளர் இல்லாத மாநிலமாக மாற்ற அனைவரும் சேர்ந்து பாடுபடுவோம் எனவும் கூறினார்.
மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்றக உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மதியழகன் மற்றும் தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் சு.வெங்கடேசுவரன் மற்றும் காவலர்கள், அமைச்சுப்பணியாளர்கள் என அனைவரும் கலந்து கொண்டு உறுதிமொழி ஏற்றனர்.