திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த தெத்தூர் பகுதியைச் சேர்ந்த பழனி. இவரது மகள் சௌந்தர்யா (19) மேல்நிலைப் பள்ளி படிப்பை முடித்துள்ளார். இந்நிலையில் இவரை அதே பகுதியைச் சேர்ந்த பேக்கரி மாஸ்டரான சேவகன் மகன் செல்வகணபதி (27) என்பவர் 3வருடங்களாக காதலித்து வந்துள்ளார். அதனை தொடர்ந்து சௌந்தர்யாவை திருமணம் செய்வதாக கூறி ஆசை வார்த்தை சொல்லி அப்பெண்ணிடம் தனிமையில் இருந்துள்ளார். இதில் கர்ப்பமான சௌந்தர்யா இதுகுறித்து காதலன் செல்வகணபதியுடன் தெரிவித்துள்ளார். இதனையறிந்த செல்வகணபதி காதலி சௌந்தர்யாவை திருமணம் செய்ய மறுத்துள்ளார். இந்நிலையில் சௌந்தர்யாவிற்கு கடந்த 06-06-23 அன்று திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் பெண் குழந்தை பிறந்தது. இதனையடுத்து மணப்பாறை அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேசனில் சௌந்தர்யா புகார் அளித்தார். இப்புகாரின்பேரில் போலீசார் விசாரைண மேற்கொண்டனர். இதனை தொடர்ந்து செல்வகணபதியை போலீசார் கைது செய்தனர். அனைத்து மகளிர் போலீஸார் நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
Tags:19 வயது பெண் கைது