கரூர் மாவட்டம் முழுவதும் 200க்கும் மேற்ப்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும், தனியார் மேல்நிலைப்பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளிகள் உள்ளது. கோடை விடுமுறை மே 1 ஆம் தேதியிலிருந்து 30 ஆம் தேதி வரை பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை விட்டிருந்த நிலையில், கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் இந்த மாதம் 11ஆம் தேதி வரை விடுமுறை நீட்டிக்கப்பட்டது. அதன்பின்பு இன்று ஆறாம் வகுப்பில் இருந்து 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவ, மாணவிகளுக்கு பள்ளி திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பள்ளி மாணவ மாணவிகள் கோடை விடுமுறை மற்றும் கூடுதலாக விடப்பட்ட விடுமுறை முடிந்து இன்று ஏராளமான மாணவர்கள் உற்சாகமாக பள்ளிகளுக்கு வந்தனர். மாணவ மாணவிகளின் பெற்றோர் தங்களது குழந்தைகளை முதல் நாளான இன்று பள்ளிக்கு அழைத்து வந்து விட்டுச் சென்றனர்.
கரூர் ஜவகர் பஜார் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளி திறக்கப்பட்டு மாணவர்கள் முதல் நாள் இன்று வருகை தந்து நிலையில் மாணவர்களை வரவேற்ற ஆசிரியர்கள் மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா தலைமையில் குழந்தைகள் தொழிலாளர் எதிர்ப்பு இனத்தை முன்னிட்டு மாணவிகளுக்கு இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.