புதுக்கோட்டையில் உள்ள குலதெய்வ கோவிலில் வழிபாட்டை முடித்துவிட்டு பொள்ளாச்சி கிணத்துக்கடவிற்கு தோஸ்த் வாகனத்தில் பத்து நபர்கள் ஊருக்கு சென்று கொண்டு இருந்தபோது, காங்கேயத்திலிருந்து திருச்சிக்கு தார் ஏற்றி சென்ற வாகனமும் கரூர் மாவட்டம் தென்னிலை பகுதியில் நேருக்கு நேர் மோதிய விபத்தில் முத்துலட்சுமி 38, நதியா 37, பெயர் தெரியாத ஆண் ஒருவர், பெண் ஒருவர் என நான்கு பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளனர்.
மேலும், 4 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு கரூர் அரசு மருத்துவக்
கல்லூரி மருத்துவமனையிலும், தனியார் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து தென்னிலை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதிகாலை நேரத்தில் விபத்து ஏற்பட்டதால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.