கரூர் அடுத்த வெண்ணைமலையில் அமைந்துள்ள அட்லஸ் கலையரங்கம் மைதானத்தில் கொங்கு ஒயிலாட்டம் மற்றும் ஈசன், வள்ளி கும்மி அரங்கேற்ற விழா நடைபெற்றது. இதில் 250-க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர், சிறுமியர் பாரம்பரிய உடையணிந்து முளைப்பாறியை ஊர்வலமாக எடுத்து வந்தனர். அதனை தொடர்ந்து முருகனுக்கு பல்வேறு சிறப்பு பூஜை மற்றும் தீபாரதனை காட்டப்பட்டது.
அதன் பின்னர் ஆண்கள் பெண்கள் சிறுவர்கள் சிறுமிகள் மாறி மாறி ஈசன் வள்ளி கும்மி ஆடினர். தொடர்ந்து ஒயிலாட்டம் ஆடினர். இதில் கொங்கு ஒயிலாட்டம் மற்றும் ஈசன், வள்ளி கும்மி குழு
ஒருங்கிணைப்பாளர் பழனிவேலு மற்றும் பலர் கலந்து கொண்டனர். திரளான மக்கள் கலந்து கொண்டு கண்டு ரசித்தனர்.