1990 களில் தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழி படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ரோஜா. இவர் செம்பருத்தி படம் மூலம் தன்னை தமிழில் அறிமுகப்படுத்தி ஆர்.கே.செல்வமணியை திருமணம் செய்து கொண்டு இல்லற வாழ்வில் செட்டிலானார். அதன் பின்னர் ஆந்திர அரசியலில் ஆர்வம் கொண்டு அரசியில் நுழைந்தார். ஆந்திரமாநிலம் , நகரி தொகுதி எம்எல்ஏவாக வெற்றி பெற்று ஆந்திரா மாநில சுற்றுலாத்துறை
மற்றும் இளைஞர் நலத்தறை அமைச்சராக ரோஜா இருந்து வருகிறார். இந்தநிலையில் ரோஜா உடல்நலக்குறைவு காரணமாக திடீரென ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். சென்னையில் ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் நேற்று இரவு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். கால் வீக்கம் காரணமாக அமைச்சர் ரோஜாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவது குறிப்பிடதக்கது.