Skip to content
Home » தடுப்பு சுவரில் மோதி பஸ் விபத்து…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்…

தடுப்பு சுவரில் மோதி பஸ் விபத்து…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்…

  • by Senthil

நாகை மாவட்டம் வேளாண்கன்னியிலிருந்து கரூர் வழியாக ஈரோடிற்கு அரசுப் பேருந்து சென்று கொண்டிருந்தது. திருச்சி – கரூர் சாலையில் காந்திகிராமம் ராம் நகர் அருகில் அதிகாலையில் வந்து கொண்டிருந்த போது சாலையின் நடுவே வைக்கப்பட்டிருந்த தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. முன்பக்க சக்கரம் தடுப்புச் சுவர் மீது பலமாக மோதியதில் பேருந்து இயக்க முடியாத நிலை ஏற்பட்டது. இந்த பேருந்தை பவானியை சார்ந்த சந்திரமோகன் ஓட்டிக் கொண்டு வந்திருந்த நிலையில் பேருந்தில் அமர்ந்திருந்த பயணிகளுக்கு அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்த விபத்து தொடர்பாக தாந்தோன்றிமலை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சாலையின் நடுவே வைக்கப்பட்டிருந்த தடுப்புச் சுவரில் ரிப்ளைக்டர் ஸ்டிக்கர் ஏதும் ஒட்டப்படாததால் இது போன்ற விபத்துக்குள் இரவு நேரங்களில் ஏற்படுவதாக ஓட்டுநனர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!