திருச்சி மாவட்டம் தொட்டியம் தாலுகா அலுவலகத்தில் வருவாய் தீர்ப்பாயம் ஜமாபந்தி ஏலூர்பட்டி, காட்டுப்புத்தூர், தொட்டியம், ஆகிய பிர்காவில் கடந்த ஏழு எட்டு ஒன்பது ஆகிய தேதிகளில் நடைபெற்றது
இந்த ஜமாபந்தியில் மூன்று பிரிக்காவில் பொதுமக்களிடமிருந்து 407- மனுக்கள் பெறப்பட்டது அதில் 89- மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. மீதமுள்ள 318 -மனுக்கள் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஜமாபந்தி மற்றும் நடைபெற்ற குடிகள் மாநாட்டிற்கு திருச்சி மாவட்ட ஆதி திராவிட நல அலுவலர் சரவணன் தலைமை வகித்தார். தொட்டியம் வட்டாட்சியர் சித்ரா வரவேற்றார்.இதில் துறையூர் ஆதிதிராவிட தனி
வட்டாட்சியர் பழனிவேல் மாவட்ட ஆட்சியர் அலுவலக நில பிரிவு கண்காணிப்பாளர் ராஜேந்திரன் தலைமையித்து துணை வட்டாட்சியர் மஞ்சுளா தேர்தல் தனி வட்டாட்சியர் செல்வி வட்ட வழங்கல் அலுவலர் சரவணன் சமூக நல தனி வட்டாட்சியர் புஷ்பராணி மற்றும் தொட்டியம் வரி ஆய்வாளர்கள் ஜீவா ஏழூர்பட்டி நாகராஜ் காட்டுப்புத்தூர் மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்
இதில் தலைமை உரையாற்றிய மாவட்ட ஆதி திராவிட நல அலுவலர் சரவணன் பேசுகையில் …இந்த வட்டம் விவசாயிகள் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில் செய்யக்கூடியவர்களாக இருப்பதால் பொதுமக்கள் மனு மீது உடனடி நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் அறிவிப்புகளின் படி தகுதி வாய்ந்த மனுக்கள் மீது உடனடி தீர்வு காணப்பட்டது. மற்ற மனுக்கள் மீது விசாரணை நடைபெற்று அதற்கும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பேசினார் .முன்னதாக பொதுமக்கள் மற்றும் விவசாய சங்கத்தை சேர்ந்த பிரதிநிதிகள் தங்களது கருத்துக்களை பதிவு செய்தனர் பின்பு பயனாளிகளுக்கு பட்டா நகல் மற்றும் நல திட்டங்கள் வழங்கப்பட்டது இந்த நிகழ்ச்சியில் அனைத்து பிர்க்கா கிராம நிர்வாக அலுவலர்கள் பயனாளிகள் மற்றும் பொதுமக்கள் விவசாய பிரதிநிதிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் மண்டல துணை வட்டாட்சியர் கவிதா நன்றி கூறினார்.