புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி ஒன்றியம், சிலட்டூர் ஊராட்சி, குன்னகுரும்பி கிராமத்தில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ், மயான வரத்துவாரி வெட்டுதல் பணியினை, மாவட்ட கலெக்டர் ஐ.சா.மெர்சி ரம்யா, இன்று (08.06.2023) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் நா.கவிதப்பிரியா, மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் எஸ்.பாலகிருஷ்ணன் மற்றும் அலுவலர்கள் உள்ளனர்.
மேலும் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் சமையல் கூடம் அமைக்கும் பணியினை, மாவட்ட கலெக்டர் சா.மெர்சி ரம்யா, இன்று (08.06.2023) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதனை தொடர்ந்து பெருமாள்பட்டியில் தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டி கட்டுமானப் பணியினை, மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் அறந்தாங்கி நகராட்சி ஆணையர் லீனா சைமன், நகராட்சி பொறியாளர் தமிழ்செல்வி மற்றும் அலுவலர்கள் உள்ளனர்.