தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (9.6.2023) தஞ்சாவூர் சுற்றுலா மாளிகையில் இவ்வாண்டு காவிரி பாசனப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். இதனைதொடர்ந்து தூர்வாரும் பணிகள் குறித்த குறும்படத்தை பார்வையிட்டார். இந்நிகழ்வின்போது, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, வேளாண்மை –
உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மகேஸ் , நாடாளுமன்ற உறுப்பினர்கள் . பழனிமாணிக்கம், ராமலிங்கம், சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா, நீர்வளத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா, தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் மற்றும் உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.