மத்திய பிரதேச மாநிலம் செஹோர் மாவட்டம் முங்காவ்லி கிராமத்தில் 300 அடி ஆழ ஆழ்துளை கிணற்றின் குழிக்குள் இரண்டரை வயது குழந்தை தவறி விழுந்தது. தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மற்றும் ராணுவத்தினர் பொக்லைன் மற்றும் ஜே.சி.பி. இயந்திரங்களுடன் விரைந்து வந்து குழந்தையை மீட்கும் முயற்சியில் இறங்கினர். 100 அடி ஆழத்தில் குழந்தை சிக்கி இருந்தது. இரவு, பகல் பாராமல் மீட்பு பணி மேற்கொண்டனர். இந்நிலையில் சுமார் 55 மணி நேர போராட்டத்திற்கு பின் அக்குழந்தை இன்று மயக்க நிலையில் மீட்கப்பட்டது. மீட்கப்பட்ட பெண் குழந்தை அங்கிருந்த ஆம்புலனஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள் குழந்தை உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். 300 அடி போர்வெல் குழிக்குள் விழுந்த குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.