புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி நகராட்சி, பெருமாள்பட்டியில், முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு தொடக்க விழாவினை முன்னிட்டு, நெடுஞ்சாலைத்துறையின் சார்பில், மரக்கன்றுகளை, மாண்புமிகு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.சிவ.வீ.மெய்யநாதன் அவர்கள் இன்று (08.06.2023) நட்டார். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஐ.சா.மெர்சி ரம்யா, இ.ஆ.ப., அவர்கள், அறந்தாங்கி நகர்மன்றத் தலைவர் திரு.ஆனந்த், அறந்தாங்கி ஒன்றியக்குழுத் தலைவர் திருமதி.மகேஸ்வரி சண்முகநாதன், உதவி கோட்டப் பொறியாளர் திரு.மோகன் மற்றும் அலுவலர்கள், நகர்மன்ற உறுப்பினர்கள் உள்ளனர்.