கரூர் மாவட்டம் கடவூர் அருகே வீரணம்பட்டியில் காளியம்மன் கோவில் திருவிழாவில் பட்டியலின இளைஞரை உள்ளே நுழைய விடாமல் தடுத்ததால் கோட்டாச்சியார் புஷ்பாதேவி தலைமையிலான வருவாய்த்துறையினர் கோவிலின் கதவினை இழுத்து பூட்டி சீல் வைத்தனர்.
சமாதான பேச்சு வார்த்தை நடத்தியும் குறிப்பிட்ட சமூகத்தினர் ஒத்துக்கொள்ளாதால் வருவாய் துறையினர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக தெரிவித்தனர்.