முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் விழாவினை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் உள்ள நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் நேற்று தொடங்கி வைத்தார். அதன் தொடர்ச்சியாக கரூர் மாவட்ட நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டத்தின் சார்பாக சணப்பிரட்டி அருகே உள்ள கரூர் திருச்சி நெடுஞ்சாலை ஓரத்தில் கரூர் மாவட்ட
ஆட்சித்தலைவர் பிரபு சங்கர் இன்று மரக்கன்றுகள் நடும் விழா தொடங்கி வைத்து, இனிப்புகள் வழங்கினார். இதில் கரூர் நெடுஞ்சாலத்துறை கோட்டப்பொறியாளர் ரவிக்குமார், உதவிக்கோட்டப் பொறியாளர் தமிழ்ச்செல்வன், உதவிப்பொறியாளர்கள் கர்ணன், பார்த்தசாரதி மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.