தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஓய்வூதியர் குறைதீர்க்கும் கூட்டம் அடுத்தமாதம் 5-ஆம் தேதி நடக்கிறது.
இதுகுறித்து தஞ்சை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் கூறியிருப்பதாவது… தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் ஓய்வூதியர் குறைதீர்க்கும் கூட்டம் வரும் ஜூலை 5-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் சென்னை ஓய்வூதிய இயக்குனர் கலந்து கொள்கிறார். அது சமயம் தஞ்சை மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஓய்வூதியர்கள் தங்களின் ஓய்வூதியம் தொடர்பான குறைகளையும், ஆலோசனைகளையும் நேரில் தெரிவித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் விவரங்கள் பெறலாம்.
கூட்டத்தில் விவாதிக்க ஏதுவாக தீர்வு செய்யப்படாத குறைகளை தெரிவிக்க விரும்பும் ஓய்வூதியர்கள் கடைசியாக பணிபுரிந்த அலுவலகத்தின் பெயர், பதவி, ஓய்வு பெற்ற நாள், கோரிக்கை விவரம், செல்போன் எண் மற்றும் கோரிக்கை தொடர்புடைய அலுவலகத்தின் முகவரியை தெளிவாக குறிப்பிட்டு வருகிற 30-ஆம் தேதிக்குள் தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு தவறாது 2 பிரதிகளில் விண்ணப்பங்களை அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.