ஓ.பி.எஸ். அணியிலிருந்து ஒன்றிய முன்னாள் தலைவர் கோவி.மகாலிங்கம் விலகி அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி அணியில் இணைந்துள்ளார். திருவாரூர் மாவட்ட செயலாளர், முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் தலைமையில் கும்பகோணம் ஒன்றிய கழக செயலாளர் சோழபுரம் அறிவழகன் முன்னிலையில் அவர் அதிமுகவில் இணைந்தார். இதில் மாவட்ட அவைத்தலைவர் ராம்குமார், ஒன்றிய செயலாளர்கள் முத்துகிருஷ்ணன், அசோக்குமார், பகுதி கழக செயலாளர் ராஜு, மாவட்ட அம்மா பேரவை செயலாளர் சின்னையன், சோழபுரம் பேரூர் கழக செயலாளர் ஆசாத்அலி, மாவட்ட அம்மா பேரவை துணைத் தலைவர் சுப்பு. அறிவழகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Tags:அதிமுகவில் ஐக்கியம்