கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருந்து வந்தது கத்திரி வெயில் என அழைக்கப்படும் அக்னி நட்சத்திரம் முடிவடைந்த நிலையில் தற்போதும் தஞ்சை மாவட்டத்தை பொருத்தவரை வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. இந்த நிலையில் நேற்று வானிலை மாற்றம் ஏற்பட்டு மாலை தஞ்சை மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது தஞ்சை கீழவாசல் டவுன் கரம்பை தெரு பகுதியில் ஆழங்கட்டி மழை
பெய்தது. இதனை அப்பகுதி மக்கள் மொபைல் மூலம் படம் பிடித்து சமுக வலைதளங்களில் வெளிட்டனர் இந்த வீடியோ வைரலாகி வருகிறது மேலும் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் உற்சாகமாக மழையில் நனைந்து விளையாடி மகிழ்ந்தனர்.