கரூர் மாவட்டம், மாயனூ அடுத்த ராசா கவுண்டனூர் பகுதியில் கருப்பண்ணன் என்ற 72 வயது முதியவர் உடல் எரிந்த நிலையில் நேற்று மீட்கப்பட்டார். நிலம் சம்பந்தமாக அண்ணன் கருப்பண்ணன், தம்பி காத்தவராயன் ஆகிய இருவருக்குள் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக தென்னந்தோப்பில் எரித்து கொலை செய்ததாக கூறப்படும் விவகாரத்தில் 24 மணி நேரம் ஆகியும் குற்றவாளியை கைது செய்யவில்லை என காவல்துறையை கண்டித்து
காந்திகிராமம் பகுதியில் கரூர் – திருச்சி நெடுஞ்சாலையில் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சுமார் அரை மணி நேரம் போராட்டத்தின் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது இதனை தொடர்ந்து போலீசார் மற்றும் அதிகாரிகள் உறவினர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, உடலை பெற்றுக் கொள்வதற்கு முன்பாக வழக்கு பதிவு செய்து, குற்றவாளி கைது செய்யப்படுவார் என்று தெரிவித்ததன் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர்.