விஜய்யின் அசத்தலான நடிப்பில் உருவாகி வருகிறது ‘லியோ’. லோகேஷ் கனகராஜின் மிரட்டலான இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அனிரூத் இப்படத்திற்கு பின்னணி இசையை அமைத்து வருகிறார். ஆக்ஷன் த்ரில்லர் படமாக உருவாகும் இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்து வருகிறது.
விஜய் வித்தியாசமான கெட்டப்பில் நடித்து வரும் இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்றது. கடும் குளிரில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்ற நிலையில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பில் க்ளைமேக்ஸ் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. சென்னை படப்பிடிப்பை முடித்து ஐதராபாத் விமான நிலையம் மற்றும் ரமோஜி பிலிம் சிட்டியில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.
இந்நிலையில் இப்படத்தின் அறிமுக பாடல் பிரம்மாண்டமாக படமாக்கப்பட உள்ளது. இந்த பாடலை உருவாக்க 2000 கலைஞர்கள் பங்கேற்க உள்ளனர். தினேஷ் மாஸ்டர் இயக்கும் இந்த பாடலை அனிரூத் மற்றும் பிக்பாஸ் புகழ் அசல் கேலார் இணைந்து பாடியுள்ளனர். இந்த பாடல் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.