தூத்துக்குடியில் நேற்று பாஜக தெற்கு மாவட்டம் சார்பில் கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது. இவ்விழாவில் பேசிய சசிகலா புஷ்பா… அமைச்சர் கீதாஜூவன், தனது தலைவர் அண்ணாமலை-யை அவதூறாக பேசினால் வெளியில் வர கால்கள் இருக்காது பேச நாக்கு இருக்காது என்று எச்சரிக்கை விடுத்து பேசியதாக கூறபப்டுகிறது. இந்நிலையில், தூத்துக்குடியில் உள்ள சசிகலா புஷ்பாவின் வீட்டில் புகுந்த மர்ம நபர்கள், அவரது வீட்டு கதவு, ஜன்னல் கண்ணாடிகள், பூந்தொட்டிகள், கார் கண்ணாடி ஆகியவற்றை உடைத்து சேதப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து சிப்காட் போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.