கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே காரமடை வனச்சரகத்திற்குட்பட்ட கண்டியூர் பகுதியில் புள்ளிமானை வேட்டையாட சுறுக்கு கம்பிகள் வைக்கப்பட்டுள்ளதாக காரமடை வனத்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலின் பேரில் காரமடை வனச்சரக அலுவலர் திவ்யா தலைமையிலான வனத்துறையினர் கன்டியூர் மலை கரடு பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது ஒரு மலை கரடு அமைந்துள்ள பகுதியில் புள்ளிமானை வேட்டையாடி அதன் இறைச்சியை விற்பனைக்கு வைத்திருப்பதாக சந்தேகத்தின் பேரில் இருவரை பிடித்து
விசாரணை நடத்தினர். விசாரணையில் சுறுக்கு கம்பியில் மாட்டி உயிரிழந்த ஆண் புள்ளிமானை இறைச்சிக்காக விற்பனைக்கு கொண்டு செல்ல முயன்றது தெரியவந்தது. இதனையடுத்து இந்த சுறுக்கு கம்பியை வைத்து புள்ளிமானை வேட்டையாடியதாக கெம்மாரம்பாளையம் சந்தானபுரம்கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணி (62), அவரது மனைவி அம்மாசை(54) என்ற முதியதம்தபதியினரை கைது செய்தனர். இதனையடுத்து இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து புள்ளிமானின் உடலை மீட்ட வனத்துறையினர் இருவருக்கும் 20,000அபராதம் விதித்தனர்.