திருச்சி மாவட்டம், முசிறி வட்டம், வாளவந்தி கிராமம், கீழதொட்டியப்பட்டியில் ஸ்ரீமாரியம்மன், ஸ்ரீமுத்தாலம்மன் மாலை தாண்டும் திருவிழாவானது 12 வருடம் கழித்து வெகு சிறப்பாக நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு மணப்பாறை, வையம்பட்டி, பஞ்சப்பட்டி, நாமக்கல், கொல்லிமலை அடிவாரம் போன்ற பகுதிகளில் இருந்து ராஜ கம்பளத்து நாயக்கர்களின் 200 க்கும் மேற்பட்ட மாடுகள் கலந்து கொண்டன.
இதில் முதலாவதாக வந்த வாணியம்பட்டி காளையும், இரண்டாவதாக கள்ளிப்பட்டி
காளையும், மூன்றாவதாக வந்து மேல தொட்டியபட்டி காளையும் வெற்றி பெற்றது.
வெற்றி பெற்ற காளைகளுக்கு கீழ தொட்டியபட்டி மந்த நாயக்கர் பாரம்பரிய முறைப்படி காளைகளின் உரிமையாளர்களுக்கு எலுமிச்சை பழ கனி வழங்கப்பட்டது. இதனையடுத்து தேவராட்டம், பொய்க்கால் குதிரை, ஒயிலாட்டம் போன்ற பாரம்பரிய நிகழ்ச்சிகள் நடைபெற்று ஸ்ரீ மாரியம்மன் ஸ்ரீ முத்தாலம்மன் கரகங்கள் சாமி கிணற்றில் குடி விடப்பட்டது.
இந்நிகழ்வில் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
பாதுகாப்புக்கான ஏற்பாடுகளை ஜெம்புனாதபுரம் போலீசார் செய்திருந்தனர்.