சென்னை, அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியில், சமூக நலன் – மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பி. கீதா ஜீவன், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் இயங்கும் சமூகப் பாதுகாப்புத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அரசு இல்ல குழந்தைகளுக்கான 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் வெற்றி
பெற்றவர்களுக்கு பாராட்டு கேடயமும், பரிசுகளையும் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் சமூகப் பாதுகாப்புத் துறை இயக்குநர் அமர் குஷ்வாஹா, அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியின் கூடுதல் இயக்குநர் திரு. ஆர். சுமன் மற்றும் துறையின் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.