Skip to content
Home » ஜெயலலிதா ஆட்சிக்கு பிள்ளையார் சுழி….. வைத்தி இல்ல மணவிழாவில் ஓபிஎஸ் பேச்சு

ஜெயலலிதா ஆட்சிக்கு பிள்ளையார் சுழி….. வைத்தி இல்ல மணவிழாவில் ஓபிஎஸ் பேச்சு

முன்னாள் அமைச்சரும், ஓபிஎஸ் ஆதரவாளரும் ஒரத்தநாடு எம்.எல்.ஏவுமான  வைத்திலிங்கத்தின் மகன் திருமண விழா இன்று தஞ்சாவூரில் நடைபெற்றது.  முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்  விழாவில் கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைத்து  மணமக்களை வாழ்த்தினார்.

அப்போது அவர் பேசியதாவது:

இன்று 7-ம் தேதி. எம்.ஜி.ஆருக்கு பிடித்தமான தேதி. மணமக்கள் எல்லா வளமும் பெற்று வாழ வேண்டும்.
அ.தி.மு.க.வை தொண்டர்களின் இயக்கமாக தோற்றுவித்தவர் எம்.ஜி.ஆர்,. அவரது மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க.வை கட்டுகோப்புடனும், ஏழை எளிய மக்களின் வளர்ச்சிக்காகவும் வழி நடத்தி தமிழகத்தில் பொற்கால ஆட்சியை எம்.ஜி.ஆர் வழியில் நிலை நிறுத்தியவர் ஜெயலலிதா. பல்வேறு சோதனைகள், சதி வலைகளை உடைத்து மாபெரும் இயக்கமாக உருவாக்கினார்.

ஆண்ட கட்சியே மீண்டும் ஆட்சிக்கு வந்தது என்றால் அது ஜெயலலிதாவால்தான். அ.தி.மு.க.வின் தூய தொண்டர்களின் எண்ணமே அனைவரும் மீண்டும் ஒன்றிணைய வேண்டும் என்பது தான். தொண்டர்கள் தான் இயக்கத்தின் ஆணிவேர், அச்சாணி. மீண்டும் ஜெயலலிதாவின் ஆட்சியை மலர செய்ய அனைவரும் ஒன்றிணைய வேண்டும். அப்படி ஒன்றிணைந்து அரசியல் களத்தில் விளையாடினால் நம்மை வெல்ல இந்தியாவிலே யாரும் கிடையாது. அம்மாவின் ஆட்சியை அமைப்பதற்கான பிள்ளையார் சுழி இன்று போடப்பட்டுள்ளது.
தஞ்சையில் எது செய்தாலும் வெற்றி தான். அதிமுகவில் அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பது தான் ஜெயலலிதா ஆன்மாவின் எண்ணமாக இருக்கும்

இவ்வாறு அவா் பேசினார். அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனும் விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

அதன் பின்னர் திருமண விழாவில் விருந்து நடந்தது. விருந்தில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி தினகரன் இருவரும் பக்கத்தில் அமர்ந்து கொண்டு மகிழ்ஜேடிசி பிரபாகர், தினகரன் அருகில் கு.ப.கிருஷ்ணன்  இருந்தார். இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *