மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் மற்றும் அமைந்தகரை லாரி உரிமையாளர்கள் நலச்சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு உண்ணாவிரத போராட்டம் சென்னை எழும்பூரில் இன்று நடந்தது. ஆன்லைனில் வழக்கு போடுவதை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது. மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் சி.தனராஜ் தலைமை தாங்கினார். போராட்டம் குறித்து அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் சேர்மன் சண்முகப்பா, மாநில லாரி உரிமையா ளர்கள் சங்க தலைவர் தனராஜ் ஆகியோர் நிருபர்க ளிடம் கூறுகையில், “லாரி உரிமையாளர்களின் நியாயமான கோரிக்கைகளை அரசு ஏற்காவிட்டால் 30-ந்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளோம். தமிழகத்தில் லாரிகள் ஓடாது, பிற மாநில லாரிகளும் வராது” என்றனர்.