திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் சு. திருநாவுக்கரசர், திருச்சி மாநகராட்சி 39-வது வார்டில் பொதுமக்கள் குறைகளை நேரில் கேட்டார். பொதுமக்களை சந்தித்து மனுக்களை பெற்றுக்கொண்டார். இந்த குறைகேட்கும் நிகழ்ச்சியில் கோட்ட தலைவர் மதிவாணன், கவுன்சிலர்கள் எல்.ரெக்ஸ், நீலமேகம், காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு மாநில துணைத்தலைவர் பேட்ரிக் ராஜ்குமார்,வட்டாரத் தலைவர் ராஜா டேனியல் ராய், எழில் ராஜா,ஆனந்தராஜ், மஞ்சத்திடல் மணி, ஜாகிர் உசேன், அண்ணாதுரை, நடராஜன், கோட்டை அன்பழகன், அழகு தாஸ், வினோத், கனகராஜ்,பாலு, ஷீலா, ஷகிலா பானு, ராதாகிருஷ்ணன், ம.தி.மு.க. சாக்ரடீஸ், டொமினிக், நாராயணசாமி, சிவக்குமார், மாநகராட்சி உதவி ஆணையர் ரமேஷ், உதவி செயற்பொறியாளர் ஜெகஜீவன்ராம், இளநிலை பொறியாளர் ஜோசப் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
பொதுமக்களிடம் பெறப்பட்ட மனுக்கள் அனைத்தும் துறைவாரியாக பிரித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளை சந்தித்து மனுக்களை கொடுப்பதுடன், அமைச்சர்களிடம் கொடுக்க வேண்டிய மனுக்கள் அமைச்சர்களிடம் வழங்கி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என திருநாவுக்கரசர் தெரிவித்தார்.