மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வரும் 11ம் தேதி வேலூர் வருகை தருகிறார். வரும் 8-ம் தேதி வரவிருந்த நிலையில், அந்த பயணம் 11ம் தேதியாக மாற்றப்பட்டுள்ளது.வேலுரில் பாஜகவின் 9 ஆண்டு கால சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் அமித்ஷா உரையாற்ற உள்ளார். நாடாளுமன்ற தேர்தலுக்கு ஒரு வருடத்திற்கும் குறைவான காலமே இருப்பதால் அமித்ஷாவின் தற்போதைய தமிழக பயணம் அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. தேர்தலுக்கு முன்பாக கட்சியை வலுப்படுத்துவது உள்பட பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து தமிழக பாஜக தலைவர்களுடன் அமித்ஷா ஆலோசனை நடத்துவார் என தெரிகிறது. வேலூரில் பாஜக பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால், வரும் மக்களவை தேர்தலில் வேலூரில் பாஜக போட்டிட முடிவு செய்திருக்கலாம் என கூறப்படுகிறது.