தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வருகிற 9-ஆம் தேதி திருவாரூர், தஞ்சை மற்றும் திருச்சி ஆகிய மாவட்டங்களில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள உள்ளார். இந்த நிலையில் இன்று திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி, லால்குடி ஆகிய பகுதிகளில் நடைபெற்று வரும் பணிகளை நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே. என். நேரு ஆய்வு செய்தார்.
லால்குடி வட்டம், காணக்கிளியநல்லூர் கிராமத்தில் நந்தியாற்றின் குறுக்கே நீர்வளத்துறை சார்பில் ரூ.10 கோடி மதிப்பில் கட்டப்பட்டுவரும் தடுப்பணை பணிகளையும் அமைச்சர் நேரு நேரில் சென்று ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது, கலெக்ர் பிரதீப் குமார், சட்டமன்ற உறுப்பினர் சௌந்தர பாண்டியன் மற்றும் அரசு அலுவலர்கள், திமுக நிர்வாகிகள் பங்கேற்றனா்.