தஞ்சாவூர் ராஜா கோரி இடுகாட்டில் பொதுமக்கள் குளிப்பதற்கு பயன்படுத்தப்படும் இடம் சுகாதாரமற்று உள்ளது. எனவே அதனை அதிகாரிகள் சுத்தம் செய்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்
தஞ்சாவூர் மாநகரில் ராஜா கோரி இடுகாடு உள்ளது. அங்கு தஞ்சை நகரத்தில் இறந்தவர்களின் உடல் தகனம் செய்யப்படும். அந்த இடம் தஞ்சை மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ளது. தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சன் ராமநாதன் பொறு ஏற்ற பிறகு இறந்தவர்களின் உடலை தகனம் செய்வதற்கு எந்த ஒரு கட்டணமும் வசூல்
செய்யாமல் இலவசமாக செய்து வருகிறார். மேலும் அந்த இடத்தையும் முறையாக பராமரித்து வருகிறார்.
இந்நிலையில் அங்கு இறுதி சடங்கு செய்யும் நபர்கள் குளிப்பதற்கு இடம் உள்ளது. மேலும் குளிப்பதற்காக பயன்படுத்தப்படும் குழாய்களை சமூக விரோதிகள் உடைத்துள்ளனர் . மூன்று நாட்களாக இறுதி சடங்கு செய்ய வரும் பொதுமக்கள் குளிக்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். அந்த இடத்தில் உள்ள குழாய்கள் அனைத்தும் உடைக்கப்பட்டு பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. மேலும் அந்த பகுதியில் தண்ணிர் தேங்கி நின்று சாக்கடை போல் உள்ளது. இரவு நேரங்களில் அங்கு சமூக விரோதிகள் மது அருந்திவிட்டு பாட்டில்களை உடைத்து போடுகிறார்கள். எனவே சம்மந்தபட்ட அதிகாரிகள் அந்த இடத்தை சுத்தம் செய்து அத்துமீறி உள்ளே வருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.